அத்திவரதரை தரிசிக்க வரும் பிரதமர்-ஜனாதிபதி

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23-ந்தேதி காஞ்சிபுரம் வரவுள்ள நிலையில் அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகிறார்.

குடியரசு தலைவரின் காஞ்சிபுரம் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று பாதுகாப்பு குறித்து டிஜிபி திரிபாதி நேரில் ஆய்வு செய்தார். காவல்துறை உயர்அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக அத்திவரதரை டிஜிபி திரிபாதி தரிசித்தார். அவரை அர்ச்சகர்கள் வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Leave a Reply