அத்திவரதரை தரிசனம் செய்ய சென்ற கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை தரிசனம் செய்ய விஜயா என்ற கர்ப்பிணி பெண்ணும் இன்று வந்துள்ளார்.

இந்த நிலையில் அத்திவரதரை தரிசித்து விட்டு விஜயா கர்ப்பிணி பெண் வெளியேறும்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அங்குள்ள மருத்துவ முகாமில் அவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த மருத்துவர்களால் அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு 3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்..

அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply