அதுல என்ன #பகீர் இருந்தது உங்களுக்கு? மீடியாவுக்கு காளிவெங்கட் கேட்ட கேள்வி

சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நடிகர் காளி வெங்கட் தனது அனுபவத்தை வீடியோவாக டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்

இந்த வீடியோவுக்கு பார்த்த ஒரு சில ஊடகங்கள் பல்வேறு தலைப்புகளில் செய்தி வெளியிட்டன

ஒரு ஊடகம் பகீர் வீடியோ என வெளியிட்டிருந்தது/ இதற்கு பதிலளித்த காளி வெங்கட் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

.8M followers இருக்காங்க கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க, முதல்ல வீடியோவ பாருங்க, தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம், அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன், அதுல என்ன #பகீர் இருந்தது உங்களுக்கு, எனக்கு தெரிஞ்ச மருத்துவர் இருக்கிற மருத்துவமனைக்கு போனேன் அங்க படுக்கை இல்ல அவ்ளோதான்’ என்று கூறினார்,.