அதிவேக 5 மில்லியன்: விஜய்யின் வெறித்தனம் செய்த சாதனை

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடல் நேற்று வெளியாகியது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதி இருக்க, விஜய் தன் குரலில் பாடியிருந்தார்

இந்தப் பாடல் நேற்று வெளியான ஒரு சில நிமிடங்களில் வெறித்தனமாக உலக அளவில் ட்ரண்ட் ஆன நிலையில் சற்று முன் இந்த பாடல் யூடிபில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்துள்ளது.

அது மட்டுமின்றி உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்கள் பார்த்த பாடல்களில் 3வது இடத்தில் வெறித்தனம் பாடல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி பெருமையுடன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply