அதிவேக 10 ஆயிரம் ரன்கள்: விராத் கோஹ்லி புதிய சாதனை 

அதிவேக 10 ஆயிரம் ரன்கள்: விராத் கோஹ்லி புதிய சாதனை 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்த சாதனையால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது

விராத் கோஹ்லி 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்து உலக சாதனை ஏற்படுத்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 259 போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி 10 ஆண்டுகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.