அதிமுக வெற்றிக்கு பாஜக தான் காரணம்: பொன் ராதாகிருஷ்ணன்

அதிமுக வெற்றிக்கு பாஜக தான் காரணம்: பொன் ராதாகிருஷ்ணன்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு தாங்கள் தான் காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற மருதுபாண்டியர் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் எங்கள் கூட்டணியான அதிமுக முன்னிலை பெற்றது மகிழ்ச்சி. இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்கள் முக்கிய காரணம். உள்ளாட்சி தேர்தலில் எங்களது கூட்டணி தொடர்வது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் பாஜகவை தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Leave a Reply