shadow

அதிமுக – பாமக கூட்டணி கூட்டணி மெகா கூட்டணியாக: ராமதாஸ்

அதிமுக – பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணியாகவும் மெகா கூட்டணியாகயாகவும் அமையும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாமக 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதிகளையும் பெற்றுள்ள நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ், ‘எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தமிழக உரிமைகளை மீட்டெடுக்க 10 கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் அளித்துள்ளதாகவும், அதில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகியவையும் அடங்கும் என்றும் கூறினார்.

மேலும் 21 தொகுதி இடைத்தேர்தலில் பாமக ஆதரவு அளிப்பதற்கு பதில் ஒரு மாநிலங்களவை தொகுதியை பாமக பெற்றுள்ளதாகவும்,அதில் டாக்டர் அன்புமணி போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply