அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அடுத்த கட்டமாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற உள்ளது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேற்று சந்தித்த அமைச்சர் எஸ் பி வேலுமணி தங்கமணி மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர்

இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் இன்று மாலையே எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகி விடும் என்றும் கூறப்படுகிறது

கமல் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply