அடுத்த ஜெயலலிதாவா?

அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை விந்தியா நியமனம் செய்யப்பட்டிருப்பதால் அவர் அடுத்த ஜெயலலிதாவாக உருவாகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 1982ஆம் ஆண்டு அதிமுகவில் ஜெயலலிதா சேர்ந்தபோது அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியை எம்ஜிஆர் அளித்தார். இந்த பதவியை தற்போது நடிகை விந்தியா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் இசக்கி சுப்பையா, புத்திச்சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக பிரிக்கப்படுகிறது என்றும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply