shadow

மக்கள் ஆதரவு அதிகம் கொண்ட மாநில முதல்வர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியா டுடே வெளியிட்ட மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38% சதவிகித மக்கள் ஆதரவுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். கேரளா முதல்வர் பினராயி விஜயன் 35% சதவிகித மக்கள் ஆதரவுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே 31% சதவிகித மக்கள் ஆதரவுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி 30% சதவிகித மக்கள் ஆதரவுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 29% சதவிகித மக்கள் ஆதரவுடன் ஆறாம் இடத்தில் உள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 29% சதவிகித மக்கள் ஆதரவுடன் ஏழாம் இடத்தில் உள்ளார்