அதிகார ஆட்டம் போட்ட அதிமுக, வெற்றி மாலை சூடிய திமுக: முக ஸ்டாலின்

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து இன்று காலை முதல் ஏற்பட்ட இழுபறிக்கு முடிவு தெரிந்துள்ளது

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின், ‘அ.தி.மு.கவின் ரத கஜ துரக பதாதிகள் அதிகார ஆட்டம் போட்டாலும், மக்களை நம்பிய தி.மு.கவுக்கே மாலை சூடியிருக்கிறார்கள் வேலூர் வாக்காளர்கள்.

இடைத்தேர்தல் போன்ற இத்தேர்தலில், எதிர்க்கட்சியின் வெற்றியே இணையிலா வெற்றிதான்! மேலும் வாக்காளர்கள், கழகத்தினர், தோழமைக் கட்சிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி! என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply