அதர்வாவின் ‘100’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

அதர்வாவின் ‘100’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

அதர்வா நடிப்பில் உருவாகிய ‘100’ திரைப்படம் வரும் மே 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்ட மே 3ஆம் தேதிக்கு பதில் மே 9ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

மே 1ஆம் தேதி கவுதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’ மற்றும் மே 3ஆம் தேதி அருள்நிதியின் ‘K13’, மோகன்லாலின் ‘லூசிஃபயர்’ மற்றும் சோனியா அகர்வாலின் ‘தனிமை’ ஆகிய திரைப்படங்கள் மட்டுமே வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதர்வா, ஹன்சிகா, யோகிபாபு, மைம் கோபி, உள்பட பலர் நடித்த இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Leave a Reply