அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் செயல்படுங்கள்: சபாநாயகருக்கு ஓபிஎஸ் மகன் வாழ்த்து

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் செயல்படுங்கள்: சபாநாயகருக்கு ஓபிஎஸ் மகன் வாழ்த்து

மக்களவையில் புதிய சபாநாயகராக இன்று பதவியேற்றுக்கொண்ட ஒம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து எம்பிக்கள் அனைவரும் இன்று பேசினர்.

அந்த வகையில் அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத் குமார் இன்று பேசியபோது, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என அண்ணா கூறினார். ஏழைகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் எம்ஜிஆர். ஏழைகளுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அதுபோல் நீங்களும் ஏழைகளுக்கான திட்டங்கள் மீதான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சபாநாயகரை வாழ்த்தி ரவீந்திரநாத் குமார் பேசினார்

Leave a Reply