shadow

அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென மீனாவிடம் வந்த ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மீனா அண்ணாத்த படப்பிடிப்பின் காட்சிக்காக தான் தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென ரஜினிகாந்த் தன்னிடம் வந்து ஐ அம் சாரி ஐ அம் அப்பாயிண்ட் யூ என்று கூறினார்

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் ’என்ன ஆச்சு சார்’ என்று கேட்டேன் இதனை அடுத்து வீராவில் பார்த்த மாதிரியே அப்படியே நீங்க இன்னும் இருக்கீங்க, ஆனா நாங்க எல்லாரும் மாறிவிட்டோம் என்று கூறினார். இதை கேட்டதும் எனக்கு ரொம்ப வெட்கமா ஆகிவிட்டது என்று மீனா அந்த பேட்டியில் கூறியுள்ளார்