அட்லியின் அடுத்த படம் தெறி 2?

பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான தெறி திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் தெரிந்ததே

இந்த நிலையில் அட்லியின் அடுத்த படம் எது என்பது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவிருந்த படம் ட்ராப் ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மீண்டும் விஜய்யை வைத்து அட்லி ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த திரைப்படம் தான் ‘தெறி 2’ என்றும் ஒரு தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது

இந்த தகவல் விரைவில் உறுதி செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply