அட்டகத்தி படத்திற்கு பின்னர் தான் ‘ரூட்’ தலை எடுத்ததா?

கல்லூரி மாணஅட்டகத்தி படத்திற்கு பின்னர் தான் ‘ரூட்’ தலை எடுத்ததா?வர்களின் ‘ரூட்’ கடந்த சில ஆண்டுகளாக பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. இந்த ரூட் மாணவர்களால் பல வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கிறது, ஒரு சில சம்பவங்கள் கொலைகள் கூட முடிகின்றது. சமீபத்தில் அரும்பாக்கம் பகுதியில் 2 மாணவர்கள் பட்டா கத்தியுடன் ஒரு மாணவரை விரட்டி விரட்டி வெட்டிய சம்பவம் சிசிடிவியில் பார்த்தபோது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சில முன்னாள் ரூட் மாணவர்கள் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து உள்ளனர். அவர்கள் இது குறித்து கூறியபோது ‘மாணவர்கள் இடையே நிகழ்ந்த மோதலால் மன வருத்தம் கொண்டுள்ளதாகவும் நவீன தொழில்நுட்பம் இல்லாத நேரத்தில் நட்பு பட்டாளங்கள் அன்பை பரிமாறும் இடமாகவே பேருந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒரு டுவிட்டர் பயனாளி ‘இந்த ரூட் தலை எடுத்தது ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்திற்கு பின்னர் என்றும், அந்த படம் மூலம் தான் பிரபலமாகாத ‘ரூட்’ பிரபலமாகி, மாணவர்கள் மத்தியில் கலவரம் ஏற்படுகிறது. இவற்றுக்கெல்லாம் இயக்குனர் பா.ரஞ்சித் தான் காரணம் என்றும் கூறியுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்

Leave a Reply