அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை செய்யக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ️சென்னையைப் பொறுத்தவரை பகலில் 42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

மேலும் ஃபோனி புயல் இன்று காலை ஏழரை மணி அளவில் ஒடிசா மாநிலத்தில் கோபால்பூர் சந்த்பாலி இடையே கரையை கடந்தது. இதன் எதிரொலியாக வங்கக்கடலில் ஒடிசா மாநில கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், ️எனவே இப்பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply