அடுத்த மீராமிதுன் நீங்கதான்: பிரபல நடிகைக்கு குவியும் பாராட்டுகள்

கடந்த 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்தவர் நடிகை சிம்ரன் என்பது தெரிந்ததே. சமீபத்தில்கூட சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட என்ற படத்தில் நடித்தார்

இந்த நிலையில் சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் நெருக்கமாக அவர் நடனமாடிய காட்சிகள் உள்ளன

இது குறித்து ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்துவருகின்றனர். நீங்கள்தான் உண்மையான பெண் சூப்பர் ஸ்டார் என்றும், அடுத்த மீராமிதுன் நீங்கள்தான் என்றும், உங்கள் நடனத்திற்கு நாங்கள் அடிமை என்றும் இதெல்லாம் என்ன சிம்ரன்? என்றும் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *