அடுத்த இலங்கை அதிபர் யார்? இன்று பரபரப்பான தேர்தல்!

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் இன்று அடுத்த அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறுவதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுவதால் அந்நாட்டின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபப்ட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசா அவர்களுக்கும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடும் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. சஜித் பிரேமதாசா முன்னாள் அதிபரான மறைந்த ரணசிங்க பிரேமதாசாவின் மகன் என்பதும் கோத்தபய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் மக்கள் கட்சி வேட்பாளரான அனுரா குமாரா திசநாயகவும் மேற்கண்ட இருவருக்கும் பெரும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இன்று காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5:00 மணி வரை நடைபெறும் என்றும் இந்த தேர்டலில் 1.6 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply