அடுத்த அத்தி வரதர் காட்சியின்போதும் அதிமுக அரசு: ஜெயகுமார்
அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் காலம் நேற்றுடன் முடிவடைந்துவிட்ட நிலையில் அத்திவரதரை கோடிக்கணக்கானோர் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் இனிமேல் அத்திவரதரை அடுத்த 40 ஆண்டுகளுக்கு பின்னரே தரிசனம் செய்ய முடியும். 
இந்த நிலையில் கடந்த முறை அத்திவரதர் காட்சி அளித்த போதும் அதிமுக அரசு இருந்ததாகவும், இந்த முறை காட்சி அளிக்கும் போதும் அதிமுக அரசு இருப்பதாகவும், அதேபோல் அடுத்தமுறை அத்திவரை காட்சியளிக்கும் போதும் அதிமுக ஆட்சி இருக்கும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply