அடுத்தடுத்து சூர்யாவுடன் இணையும் ஜிவி பிரகாஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

அடுத்தடுத்து சூர்யாவுடன் இணையும் ஜிவி பிரகாஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ள இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மீண்டும் சூர்யா படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ள செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்துள்ள சூர்யாவின் 40வது திரைப்படத்திற்கு இசை அமைக்க இருப்பதாக சற்றுமுன்னர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை உள்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ் மீண்டும் வெற்றிமாறன் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த மற்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Leave a Reply