அஜித்தை நூலிழையில் முந்திய ஜோதிகா

அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஒரு வாரம் முன் ஜோதிகாவின் ராட்சசி திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

‘ராட்சசி’ திரைப்படத்திற்கு இன்று சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த படம் ஜூலை வெளியீடு என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். அனேகமாக ஜூலை 25ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கவுதம் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோதிகா, ஹரிஷ் பெராடி, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

Leave a Reply