அஜித்தை சந்தித்த வெங்கட்பிரபு! ‘மங்காத்தா 2’ உறுதியானதா?

அஜித்தை சந்தித்த வெங்கட்பிரபு! ‘மங்காத்தா 2’ உறுதியானதா?

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் அஜித்தின் 50வது படமாக மட்டுமின்றி மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தல ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலைஇல் ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டும் வகையில், இயக்குநர் வெங்கட் பிரபு அஜித்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கல் மங்காத்தா-2 தயாராகி விடும் என குஷியாகி விட்டனர். இந்த சந்திப்பால் மங்காத்தா 2 படம் உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அஜித்தை சந்தித்ததாக வெங்கட் பிரபுவின் நண்பர் வட்டாரங்கள் கூறியுள்ளன. இருவரும் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால், அதை எல்லாம் முடித்து விட்டு மங்காத்தா 2 எடுக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

Leave a Reply