அஜித்துடன் நடிப்பது உண்மையா? நிவின்பாலி விளக்கம்

அஜித்துடன் நடிப்பது உண்மையா? நிவின்பாலி விளக்கம்

அஜீத்துடன் ‘விசுவாசம்’ படத்தில் இணைந்து நடிப்பது பற்றி வந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் நிவின்பாலி.

நான்காவது முறையாக சிவாவும், அஜீத்தும் இணையவுள்ளார். படத்திற்கு ‘விசுவாசம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் படபிடிப்பு இம்மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவதாக அஜீத் & சிவா இணைகிறார்கள். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று முதலில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் அது முற்றிலும் வதந்தி என நிவின் பாலி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கவேண்டும் என தனக்கு ஆசை இருப்பதாக நிவின் கூறியுள்ளார்.

Leave a Reply