shadow

அஜித்தின் விசுவாசம்’ பூஜை முடிந்தது. கிறிஸ்துமஸ் தினத்தில் ஃபர்ஸ்ட்லுக்?

வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களின் வெற்றிக்கூட்டணியான அஜித்-சிவா கூட்டணி இணணந்து‘விஸ்வாசம்’ என்ற படத்தை உருவாக்கவுள்ளது. அஜித்தின் 58வது படமாக உருவாகும் இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்காக அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து புதிய கருப்பு நிற ஹேர்ஸ்டைலில் தோன்றி வருகிறார். அஜித் இந்தப் படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்திற்காக அலுவலக பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் சிவா, எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா அல்லது நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *