அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்

ஆகஸ்ட் 8-ம் இடத்தில் வியாழ்க்கிழமை மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு என்ற வார விடுமுறையும் 12ஆம் தேதி பக்ரீத் விடுமுறையும் 15ம் தேதி சுதந்திர தின விடுமுறை வருவதால் ஒரு நீண்ட விடுமுறை நாட்கள் இந்த படத்திற்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்துள்ளது

எனவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் எச்.வினோத் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது

Leave a Reply