அஜித்தின் துப்பாக்கி சுடும் வீடியோ: இணையதளங்களில் வைரல்

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை அஜித் ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர்

நடிப்பு மட்டுமின்றி பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டி வரும் அஜித், தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி கோவையில் தொடங்கிய துப்பாக்கி போட்டி ஒன்றில் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி சென்னை ரைஃபில் கிளப் சார்பில் அஜித்குமார் 25 மீட்டர் பிரிவில் பங்கேற்றார். இதனையடுத்து அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் நடிகர் அஜித்துக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்

இந்த போட்டியில் அஜித்துக்கு எத்தனையாவது இடம் கிடைத்தது என்பது தெரியவில்லை. ஆனால் அஜித் இந்த போட்டியில் கலந்து கொண்டதையே பெரிய விஷயமாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்

Leave a Reply