அசுரன் ரீமேக்கில் தேசிய விருது பெற்ற நடிகை

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷ் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிக்க நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது

முதலில் இந்த கேரக்டரில் நடிக்க ஸ்ரேயா சரணிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் அவரிடம் கால்ஷீட் தேதிகள் இல்லாததால் தற்போது பிரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் பிரியாமணிக்கு ஒரு ரீ-எண்ட்ரி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply