அக்டோபர் 3ல் பிக்பாஸ் தமிழ்: அதிரடி அறிவிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5 விஜய் டிவியில் அக்டோபர் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் மிளா, ஜிபி முத்து, கனி, சுனிதா, ப்ரியங்கா, ப்ரியா ராமன் என்பதும் அவர்கள் சென்னையில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது