கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் என்பதும், இந்த படத்தை ராஜகிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அக்சராஹாசனுடன் முக்கிய வேடத்தில் பிரபல பின்னணி பாடகி உஷா உதுப் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது

அதேபோல் பிரபல நடிகை ஆண்ட்ரியா நடித்து வரும் படம் ஒன்றின் டைட்டில் ‘நோ எண்ட்ரி’ என்று வைக்கப்பட்டுள்ளது. நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்த டைட்டிலை இன்று வெளியிட்டார்.

அழகு கார்த்திக் இயக்கி வரும் இந்த படத்திற்கு அஜேஷ் இசையமைக்கின்றார். ரமேஷ் படத்தொகுப்பில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தையும் ஜாம்போ சினிமாஸ் என்ற நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

ஆண்ட்ரியா, நோ எண்ட்ரி, விஜய் ஆண்டனி, அழகு கார்த்திக்

Leave a Reply