அகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி

அகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி

உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்த கூட்டணியின் நோக்கம் பாஜகவை வீழ்த்துவதாக இருந்தாலும் காங்கிரஸை இந்த கூட்டணியில் இருவரும் இணைத்து கொள்ள விரும்பவில்லை

இந்த நிலையில் மாயாவதி, அகிலேஷ் ஆகியோருடன் எந்த மோதலும் இல்லை என்றும் தேவையான தொகுதிகளில் அவர்களுடன் இணைந்து பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் முயற்சி செய்யும் என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் உ.பி.யில் அகிலேஷ் – மாயாவதி கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் கிடைக்காததால் பிரியங்காவை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகவே பிரியங்காவுக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.