ஃபாலோ ஆனை தவிர்த்தது இலங்கை: இந்திய அணிக்கு வெற்றி கிடைக்குமா?

ஃபாலோ ஆனை தவிர்த்தது இலங்கை: இந்திய அணிக்கு வெற்றி கிடைக்குமா?

டெல்லியில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றியை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் 536 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்த இந்தியா, பின்னர் இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது.

இலங்கை அணியில் கேப்டன் சண்டிமால் மற்றும் மாத்யூஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்ததால் இலங்கை அணி 130 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 356 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் சண்டிமால் 147 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளார். 180 ரன்கள் இலங்கை அணி பின் தங்கியுள்ளதால் இந்த போட்டி இந்தியாவுக்கு சாதகமான நிலை இருந்தாலும் இன்னிங்ஸ் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது

இன்றும் நாளையும் மட்டுமே ஆட்டம் இருப்பதால் தோல்வியை தவிர்க்க இலங்கை போராடும் என்றும் டிராவை நோக்கி செல்ல அந்த அணி தீவிர முயற்சி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.