ஃபானிபுயல் சேதம் விளைவிக்காமல் கடக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்: ஓபிஎஸ்

ஃபானி புயல் இன்று ஒடிஷா, மேற்குவங்கம் வழியே கரையை கடந்து வரும் நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை துணை முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவில், வங்கக்கடலில் மையம் கொண்டு அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ஃபானிபுயல் இன்று ஒடிஸா கடற்பகுதியை கடக்க உள்ள நிலையில் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியில் செல்வதை தவிர்த்து, இல்லங்களிலோ முகாம்களிலோ பாதுகாப்பாக இருக்கும்படியும், அரசின் அறிவுறுத்தல்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றியும் உதவி மையங்களை தொடர்பு கொண்டும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்திடவும் கேட்டுக்கொண்டு, ஃபானிபுயல் சேதம் விளைவிக்காமல் கடக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

Leave a Reply