shadow

Zimbabwe v United Arab Emirates - 2015 ICC Cricket World Cupஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஐக்கிய அரபுகள் அணியை ஜிம்பாவே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாவே மற்றும் ஐக்கிய அரபுகள் நாடு அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாவே அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது.

முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. சைமான் அன்வர் 67 ரன்களும், குர்ரம்கான் 45 ரன்களும் எடுத்தனர்.

286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி, 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மியரெ 76 ரன்களும், டெய்லர் 47 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாவே வீரர் வில்லியம்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply