shadow

eye donateமலேசியாவை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 17 மாத செல்லக்குழந்தைக்காக தங்களுடைய ஒரு கண்ணை தியாகம் செய்துள்ளனர். அந்த தம்பதிகளுக்கு ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பாராட்டு குவிந்து வருகிறது.

மலேசியாவை சேர்ந்த யூஸ் நூர்லினா என்ற 25 வயது பெண்ணுக்கும், அவரது கணவர் சைபிக் ஆஸ்மி என்பவருக்கும் பிறந்த குழந்தை பிறக்கும்போதே இடது கண் பார்வையில்லாமல் பிறந்தது. மேலும் அந்த குழந்தையில் வலது கண்ணும் பார்வை மங்கியதாக இருந்தது.

இந்நிலையில் யூசுப் நூர்லினா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் ஆளுக்கொரு கண்ணை தங்கள் செல்ல மகளுக்கு தானமாக கொடுக்க முன்வந்தனர். இருவரிடம் இருந்து தலா ஒரு கண்ணை சர்ஜரி செய்து எடுத்து அவர்களுடைய குழந்தைக்கு மருத்துவர்கள் பொருத்தினர். தற்போது அவர்களுடைய குழந்தை நன்றாக பார்வை பெற்றுள்ளது. தங்கள் செல்ல மகளின் பார்வைக்காக நாங்கள் ஒரு கண்ணை இழந்ததை நினைத்து பெருமைப்படுவதாக அந்த தம்பதிகள் கூறினர்.

Leave a Reply