shadow

yugiபிரபல நடிகர் யூகிசேதுவை தமிழ்த் திரையுலகம் எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த நடிப்பு இன்னும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கும். கமல்ஹாசனுடன் இவர் அன்பே சிவம், பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் ஆகிய படங்களில் நடித்து கமல்ஹாசனின் பிரியத்துக்குரிய நடிகர்களில் ஒருவராக மாறியவர் என்பதை கோலிவுட் திரையுலகம் அறியும்.

இந்நிலையில் கமல்ஹாசன் தற்போது தயாரித்து நடித்து வரும் ‘தூங்காவனம்’ படத்தில் யூகிசேதுவுக்கு மிக முக்கிய வேடம் ஒன்றை கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். கதையின் திருப்புமுனைக்கு காரணமான கேரக்டரை தன்னை நம்பி ஒப்படைத்த கமல்ஹாசனுக்கு யூகிசேது நன்றி தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனுடன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், மதுஷாலினி, சம்பத்குமார் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் இயக்கவுள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது

Leave a Reply