shadow

Monal Gajjar Stills $ (1)

 

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று கவலைக்கிடமான நிலையில் தமிழ் நடிகை மோனல் கஜ்ஜார் அவர்கள் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

தெலுங்கில் சுடிகாடு என்ற படத்தில் அறிமுகமான நடிகை மோனல் கஜ்ஜார், தமிழில் வானவராயன் வல்லவராயன், மற்றும் சிகரம் தொடு ஆகிய இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்தவர். தற்போது லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று மாலை இவர் தன்னுடைய வீட்டில் மயங்கிக்கிடந்ததை பார்த்த இவருடைய உதவியாளர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவருடைய உணவில் விஷம் கலந்திருப்பதாக முதல்கட்ட பரிசோதனையில் தெரிய வந்தது.

இதனால் இவர் தற்கொலை முயற்சி செய்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் சிகிச்சைக்கு பின்னர் கண்விழித்த மோனல் கஜ்ஜார், நேற்று மதியம் சாப்பிட்ட உணவு தனது உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் புட் பாய்சனாக மாறியதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். தற்போது குணமடைந்து வரும் நடிகை மோனல் கஜ்ஜார் இன்று இரவுக்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *