shadow

duiigh-350x250

கடந்த ஆண்டு பேஸ்புக் நியர்பை ப்ரென்ட்ஸ் எனும் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் உங்களது நண்பர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முடியும். பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பணம் செலுத்தவும் முடியும். பேஸ்புக்கில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்தையும் பெட்டகமாக பேஸ்புக் வைத்து கொள்ளும், அதில் நீங்கள் அழித்த தகவல்களும் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா, அவைகளை நீங்கள் மீட்கவும் முடியும். இது போல் பேஸ்புக்கில் உங்களுக்கு தெரிந்திராத சில பயனுள்ள அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் நீங்கள் பயன்படுத்தாத பயனுள்ள பேஸ்புக் அம்சங்களை பாருங்கள்..

கொடை பேஸ்புக் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவ முடியும்.தற்சமயம் சில அமெரிக்க தொண்டு நிறுவனங்களின் பேஸ்புக் பக்கத்தில் இதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது.

அழிக்கப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கில் நீங்கள் அழித்த தகவல்களை மீண்டும் பெற பேஸ்புக் செட்டிங்ஸ் பக்கத்தில் இருக்கும் டவுன்லோடு ஏ காப்பி என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

பதிவு டைம்லைனில் காணப்படும் செய்திகளை உடனே பார்க்க முடியாத சமயங்களில் அதனை பின்னர் வாசிக்க பதிவு செய்து கொள்ள முடியும்.

பேஸ்புக் காலன்டர் கூகுள் காலன்டரில் அதிகமாக பயன்படுத்துவீர்களா, அப்படியானால் அதனினை பேஸ்புக்கில் சின்க் செய்து கொள்ள முடியும்.

பக்கம் பேஸ்புக்கில் உங்களது ப்ரோஃபைலினை தனி பக்கமாக மாற்ற முடியும்.

Leave a Reply