shadow

12313735_1075355645816757_6131639819779977463_n

யசோதையை அந்தப் பாடு படுத்தி இருக்கானே கண்ணன், அதுக்காக எல்லாம் அவனைக் கோபிக்க முடியுமா என்ன??? மாமனாகிய கம்சன் தாத்தாவையும் சிறையில் அடைத்துவிட்டுத் தானே கொடுங்கோல் அரசனாக மாறியதைத் தண்டிக்க மட்டுமல்லாமல், இவ்வுலகில் பற்பல லீலைகளையும் நடத்திக் காட்டி, ஒரு நடமாடும் தெய்வமாகவே விளங்கியவன் கண்ணன். நந்தகோபனின் கோகுலத்தில் கண்ணன் செய்த லீலைகள் கொஞ்சமா, நஞ்சமா?? வெண்ணெய் திருடித் தின்கின்றான் கண்ணன். அவன் கோபியர் ஓடி வரும்போது அந்த வெண்ணெய் கீழே சிந்தி விடுகின்றது. அந்த வெண்ணெயிலேயே கால்பதித்து ஓடி ஒளிகின்றான் மாயக் கண்ணன். அதை நினைவூட்டவே இன்றும் அரிசிமாவினால் வெண்மையான கண்ணனின் குட்டிக் குட்டிப் பாதங்களைப் பதிக்கின்றோம், கண்ணனின் பிறந்த நாளன்று. வெண்ணெயைத் திருடித் தின்னும் கண்ணனுக்கு யாருமே வெண்ணெய் கொடுக்க மாட்டார்களா என்ன? கொடுப்பார்கள், என்றாலும் கண்ணன் கொடுக்காதது போலும், அதனாலேயே திருடித் தின்பது போலும், அடிக்குப் பயந்தது போலும் நடித்தான். கோபியர்கள் யசோதையிடம் வந்து கண்ணனைப் பற்றிய புகார்கள் சொல்ல அவளும் கண்ணனைக் கடிந்து கொண்டு உரலில் கட்டிப் போடுகின்றாள். கண்ணன் சும்மாவா இருப்பான்?? உரலையும் இழுத்துக் கொண்டு நகருகின்றான். உரலினால் மோட்சம் கிட்டுகின்றது நள, கூபரர்களுக்கு

Leave a Reply