எஸ் வங்கி நிறுவனர் கைது: அதிகாலையில் அமலாக்கத் துறை அதிரடி

எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் இன்று அதிகாலை அமலாக்கத் துறையினர்களால் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் எஸ் வங்கி வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இதனை அடுத்த எஸ் வங்கியை இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேலும் எஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இருப்பினும் வங்கி வாடிக்கையாளர்கள் பணத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் எஸ் வங்கியை எஸ்பிஐ வாங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று காலை முதலே எஸ் வங்கி நிறுவனரான ரானா கபூரின் வீட்டில் அதிரடியாக சோதனை செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள் அதன்பின் அவரை விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்

விடிய விடிய அவரிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும் இந்த விசாரணையின் அடிப்படையில் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply