shadow

I and yennai arindhaalஅஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படமும், ஷங்கரின் ‘ஐ’ படமும் ஒரே நாளில், அதாவது ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த இரு படங்களின் டிரைலரும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆவதால் இரு படங்களுக்கும் இடையே ஏற்பட்டு வரும் போட்டி வெளிப்படையாகவே தெரிய வந்துள்ளது.

ஷங்கரின் மெகா திரைப்படமான ‘ஐ’ படத்தின் டிரைலர் டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 24ஆம் தேதியே ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னை அறிந்தால் டீசர் ரிலீஸுக்கே ஒருவாரம் டுவிட்டரை குத்தகைக்கு எடுத்துக்கொண்ட அஜீத் ரசிகர்கள், டிசம்பர் 24ஆம் தேதியில் டிரைலர் வெளியானதும் பெரிய அளவில் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பரபரப்பு ஏற்படுத்த காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டிசம்பர் 25ஆம் தேதி ‘ஐ’ படத்தின் டிரைலர் வெளியானால் அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்பதில் படக்குழுவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் சென்னை உள்பட முக்கிய ஊர்களின் திரையரங்குகளை கைப்பற்றுவதில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply