shadow

shanthi_sudharshana_homam_1

 

ஹோமம் அல்லது யாகங்கள் என்பது என்ன என்று பார்ப்போமானால் அக்னி வளர்த்து செய்யப்படும் ஒரு பூசைமுறையே ஹோமம் ஆகும். தெய்வ சக்தியினை சில வழிமுறைகள் மூலம் அக்னியில் எழுந்தருளச் செய்து, அவர்களிற்கு செய்ப்படும் ஒரு முழுமையான பூசை முறையே ஹோமம் ஆகும். இதில் பல பொருட்கள் மந்திரங்களின் மூலம் எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்யப்படுகிறதோ அந்த தெய்வத்திற்கு சமர்க்கப்படுகின்றது. ஹோமத்தீயில் தெய்வங்களை எழுந்தருளச் செய்து செய்து பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரமோதி நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன.

 பண்டைய காலத்தில் நாம் பார்த்தோமானால் தேவர்கள், ரிசிகள், முனிவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் மக்களின் நன்மைக்காகவும் ஹோமங்கள் செய்தார்கள். பிற்பாலத்தில் மன்னர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் மக்களின் நன்மைக்காகவும் ஹோமங்கள் செய்தார்கள் மகாபாரத்திலும், ராமாயணத்திலும் இதற்கு சான்றுகள் உள்ளது. பாஞ்சாலியும் அவளது சகோதரனும் ஹோமத்திலிருந்து வெளிவந்தார்கள் எனக் கூறுகிறார் வியாச முனிவர். இதிலிருந்து ஹோமங்களின் வலிமையும் சிறப்பும் விளங்குகிறது. அதாவது இயற்கைக்குமாறாக யாகத்தீயிலிருந்து குழந்தைக ள். உருவாக்கப் பட்டுள்ளன.முறைப்படி செய்யப்படும் ஹோமங்கள் மூலம் எதையும் பெறலாம்.

தியான வழிமுறையில் இறைவனை வழிபடும் போது உடலிற்குள் இருக்கும் அக்னி மூலமாக நமது வழிபாடுகள் இறைவனை சென்றடைகிறது. உதாரணமாக முத்தீ அதாவது மோட்சம் இதனைப் பகுத்தோமானால் மூன்று + தீ = முத்தீஆகிறது. நமக்குள் இருக்கும் மூன்று அக்கினியையும் செயற்பட வைக்கும் போது மோட்சம் கிடைக்கிறது. உடலிற்குள் இருக்கும் மூன்று தீயையும் கண்டறிவதற்கான் உடலிற்கு வெளியே செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையே ஹோமங்களாகும். இது எப்படி எனப் பார்ப்போமானால் யாரிற்கு மோட்சம் கிடைக்கும் என்றால்; தெரிந்தோ தெரியாமலே செய்த பாவங்கள் அனைத்தும் விலகியவர்களே மோட்சத்தை அடைகிறார்கள். அக்னியிற்கு எல்லாவற்றையும் எரிக்கும் சக்தி உள்ளது. முறையான மந்திரங்கள் சொல்லி வளர்க்கப்படும் அக்னி நமது பாவங்களை எரித்து விடுகிறது. பின்னர் நாம் எந்த தேவதையோ தெய்வத்தையோ நோக்கி செய்யும் மந்திர பூசைகள் மூலம் நமக்கு அந்த தேவதையினதோ தெய்வத்தினதோ அருள் கிடைக்கிறது. இந்த அருளானது நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்லது நடக்க அருள் புரிகிறது.

சில ஹோமங்களும் அதன் பயன்களும் :

 

கணபதி ஹோமம்                : தடைகள் விலகும், எடுத்தகாரியங்கள் வெற்றி அடையும்.

சண்டி ஹோமம்                    : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்த வரும் தரித்திரம் நீக்கும்.

நவகிரஹ ஹோமம்           : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

சுதர்ஸன ஹோமம்             : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.

ருத்ர ஹோமம்                         : ஆயுள் விருத்தி உண்டாகும்.

மிருத்யுஞ்ச ஹோமம்           : மந்தி தோஷம் போக்கும், பிரேத  சாபம் நீக்கும்.

புத்திர காமேஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.

சுயம்வர கலா பார்வதி ஹோமம்     : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

ஸ்ரீ காந்தர்வ ராஜ                 : ஆண்களுக்கு திருமண தடை நீக்கிஹோமம்  விரைவில் நடைபெறும்.

லக்ஷ்மி குபேர                      : செல்வ வளம் தரும், பொருளாதாரஹோமம்  பெருக்கம் ஏற்படும்.

 

எல்லா யாகங்களையும் வாழ்வில் செய்ய முடியாதவர்கள்குறைந்த பட்சம் பஞ்ச யக்ஞ ஹோமம் எனப்படும் முதல் ஐந்துஹோமங்களையாவது (.கணபதி ஹோமம்> சண்டி ஹோமம்>நவக்கிரக ஹோமம்> சுதர்சன ஹோமம்> ருத்ர ஹோமம் ) செய்தால்இம்மையிற்கும்> மறுமையிற்கும் சிறப்பான பலன்களை நாம்எதிர்பார்க்கலாம். இதில் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியதுஇந்த ஹோமங்களைச் செய்யும் வாத்தியார்கள் என்றழைக்ப்படும் ஆச்சாரியார்கள் இவற்றை செய்வதில் அனுபவம் பெற்றவர்களாகஇருக்கவேண்டும். குறைந்த பட்சம் பத்து பதினைந்துஹோமங்களிற்காவது உதவியாளராக சென்ற அனுபவமாவதுஇருக்க வேண்டும்.

 இன்னும் முக்கியமான விடயம் யாதெனில் யார்யாகங்கள் செய்கிறாரோ அவர் முழுமையான நம்பிக்கையுடன்இதனை செய்விப்பது அவசியமாகும். சிரமப்படாமல் பணச்செலவுமட்டு;ம் தானே பார்ப்போம் வந்தால் லாபம்இல்லாவிட்டால் பண நட்டம் மட்டும்தானே போன்ற நினைப்புகளில் ஏனோதானோ என செய்வித்தால் ஏதோ ஒருவழியில் யாகத்தில் குறை ஏற்பட்டுமுழுமையான பலனோ அல்லது நினைத்தபலனோ கிடைக்காமல் போய்விடும். கும்பகர்ணன் நினைத்தது;நித்தியத்துவம் ஆனால் கிடைத்தது நித்திரைத்துவம். கடுமையானதவங்கள், பூசைகள் இல்லாமல் நாம் நம் வாழ்வினைநலமாக்குவதற்கு பணத்தைக் கொண்டு வாங்கப்பட கூடிய விடயம்ஹோமம் ஆகும். இதில் நாம் சரியாக நடக்காவிட்டால் எதிர்விளைவுகளையும் கொடுக்க வாய்ப்புள்ளது என்பதனையும் நாம்கருத்திற் கொள்ள வேண்டும்.

  ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்வதும் ஒரு சிறப்பான விடயமாகும்.

Leave a Reply