shadow

ஒரே வாரத்தில் 464 முறை நிலநடுக்கம்: எரிமலை வெடிக்கும் அபாயம்

அமெரிக்காவில் உள்ள Yellowstone National Park என்ற பகுதியில் அடிக்கடி எரிமலை வெடித்து தீக்குழம்புகள் வடியும் பகுதி ஆகும். இந்த அபாயகரமான பகுதியில் ஒரே வாரத்தில் 464 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு சம்பவம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக புவியியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

நிலநடுக்கம் வந்தால் பொதுவாக சுனாமி எச்சரிக்கை விடப்படுவதுதான் வழக்கம். ஆனால் Yellowstone National Park கடந்த ஜூன் 12 ஆம் முதல் 19ஆம் தேதி வரையிலான ஒரே வாரத்தில் 464 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜூன் 15ஆம் தேதி 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பூமிக்கடியில் உள்ள எரிமலைக்குழம்புகளால்தா இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்தில் அது பூமிக்கு வெளியே வெடித்து மிகப்பெரிய அழிவை உருவாக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply