shadow

இரண்டு புலிகளுக்கு இடையில் சிக்கிய ஆர்யா

yatchanவிஷால் நடித்துள்ள பாயும் புலி’ படத்திற்கும் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்திற்கும் இடையே ஆர்யா நடித்துள்ள ‘யட்சன்’ படம் சிக்கியுள்ளது. பாயும் புலி திரைப்படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதியும், விஜய்யின் புலி திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதியும் ரிலீஸாகவுள்ள நிலையில், ஆர்யாவின் யட்சன் திரைப்படம் செப்டம்பர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் ‘புலி’ செப்டம்பர் 17ல் ரிலீஸ் ஆனால் பெரும்பாலான தியேட்டர்களை இந்த படம் ஆக்கிரமித்துக்கொள்ளும். இந்நிலையில் யட்சன் படத்திற்கு சரியாக ஒருவார இடைவெளிதான் உள்ளது. அதற்குள் இந்த படம் தேவையான கலெக்ஷனை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும் யூடிவி நிறுவனம் ரிஸ்க் எடுக்க தயாராகிவிட்டது.

அஜீத் ரசிகராக இந்த படத்தில் ஆர்யா நடித்துள்ளதால் அஜீத் ரசிகர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என அவர் எதிர்பார்த்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிருஷ்ணா, தீபா சந்நிதி, ஸ்வாதி ரெட்டி, கிஷோர், ஒய்.ஜி.மகேந்திரா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கேரக்டரில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் அமைந்துள்ள இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். ஆர்யாவுடன் விஷ்ணுவர்தன் இணையும் 5வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply