shadow

yamirukka

நாயகன் கிருஷ்ணா தனது காதலியுடன் சென்னையில் ஆண்மை இழந்தவர்களுக்கான மருந்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். அவருக்கு வரும் ஒரு மர்ம கடிதத்தில் அவருடைய தந்தையின் பூர்வீக சொத்து ஒன்று கொல்லி மலையில் இருப்பதாக தகவல் வருகிறது. தனது காதலி ரூபாவுடன் கொல்லிமலைக்கு செல்கிறார்.

அந்த பங்களாவை பல லட்சங்கள் செலவழித்து ஒரு லாட்ஜாக மாற்றுகிறார். கருணா மற்றும் அவரது சகோதரி ஓவியா, கிருஷ்ணா மற்றும் அவரது காதலி ரூபா ஆகிய நான்குபேர்களும் இணைந்து லாட்ஜை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் லாட்ஜுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இறந்தவர்கள் குறித்து போலீஸில் தகவல் கொடுக்காமல் இவர்களே பிணங்களை புதைத்து விடுகின்றனர். அந்த ஓட்டலில் இருக்கும் ஒரு பெண் பேய் இவர்கள் நான்கு பேர்களையும் விரட்டுகிறது. அந்த பேயை எப்படி நான்கு பேர்களும் சமாளிக்கின்றனர், லாட்ஜில் இறந்தவர்களின் பிணங்கள் என்ன ஆயிற்று என்பதை பயம் ப்ளஸ் காமெடியுடன் சொல்லியிருக்கும் படம்தான் யாமிருக்க பயமே.

கழுகு படத்தில் ஹீரோவாக நடித்த கிருஷ்ணாவுக்கேற்ற வேடம். அவரும் நன்றாக பயன்படுத்தியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரூபாவுக்கும் நடிப்பதோடு கிளாமரில் கலக்கவும் நல்ல வாய்ப்பு. இவர்கள் இருவரும் பேசும் டபுள் மீனிங் டயலாக்கின் போது தியேட்டரே அதிர்கிறது.

ஓவியாவுக்கு பயப்படுவதும், கிளாமர் காண்பிப்பது மட்டும்தான் வேலை. ஆனாலும் அதை உருப்படியாக செய்துள்ளார். ரூபாவும் ஓவியாவும் போடும் சக்களத்தி சண்டை சரியான காமெடி.

திரைக்கதை மற்றும் டைமிங் வசனங்கள் படத்தின் ப்ளஸ் பாயிண்ட். கோச்சடையான் தாமத்ததால் ஓரளவுக்கு தியேட்டரில் கலெக்ஷன் இருப்பதாக கூறப்படுகிறது. பாடல்களில் தூக்கலான கிளாமர், பயத்தையும் காமெடியுடன் கொடுக்கும் புத்திசாலித்தனமான திரைக்கதை ஆகியவற்றால் இயக்குனர் டிகே தேறுகிறார்.

செம ஜாலியான படம். பார்க்கலாம்

Leave a Reply