யாஹூ நிறுவனத்தின் முக்கிய செயலாக்க அதிகாரியாக கடந்த 2012ஆம் ஆண்டில் நியமனமான டி கேஸ்ட்ரோ திடீரென அந்நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுவதாக யாஹூ நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி மரிசா மேயர் நேற்று அறிவித்துள்ளார். இது யாஹூ நிறுவன ஊழியர்களிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட டி கேஸ்ட்ரோ இதற்கு முன்னர் கூகுள் நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பணிநீக்கத்திற்கு எவ்வித காரணத்தையும் மரிசா மேயர் தெரிவிக்கவில்லை. எனினும் இவரது செயல்பாட்டில் மரிசா திருப்தி கொள்ளவில்லை என கூறப்படுகிறது. டி கேஸ்ட்ரோ யாஹூ நிறுவனத்தில் சேர்ந்து 15 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு வரை இரண்டாம் இடத்தில் இருந்த யாஹூ நிறுவனம் தற்போது அந்த இடத்தை ஃபேஸ்புக் இணையதளத்திடம் இழந்துள்ளது. மீண்டும் இரண்டாம் இடத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கையை சரியாக எடுக்காத காரணத்தால் டி கேஸ்ட்ரோ பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஊழியர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு வரும் பிரபலம் யார் என்பது குறித்து இப்போதே பரபரப்புடன் ஊடகங்கள் கணிக்க தொடங்கிவிட்டன. ஃபேஸ்புக்கில் பணிபுரியும் ஒரு முக்கிய செயல் அதிகாரி நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *