shadow

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் யானை படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது

அருண்விஜய், பிரியா பவானி சங்கர், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் நடித்து வரும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்

மேலும் இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.