shadow

விஜய்சேதுபதியின் ‘தர்ம்துரை’ படத்தில் ரஜினி மகள்

madhu-vandhiசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்களின் சகோதரியை பிரபல நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் திருமணம் செய்திருந்தார் என்பதும் இவர்களுக்கு மதுவந்தி என்ற மகள் இருக்கின்றார் என்பதும் அனைவரும் தெரிந்ததே.

இந்நிலையில் ரஜினிக்கும் மகள் முறையான மதுவந்தி தற்போது சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தர்மதுரை’ படத்தில் அவர் முக்கிய கேர்கடரில் நடித்திருப்பதாகவும், அதேபோல் ஆர்யா, கேதரின் தெரசா நடித்து வரும் ”கடம்பன்’ படத்திலும் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய்சேதுபதியின் தர்மதுரை’ படத்தில் ஏற்கனவே தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய மூன்று முன்னனி நாயகிகள் நடித்துள்ள நிலையில் தற்போது மதுவந்தியும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply