shadow

 rajam krishnanபழம்பெரும் தமிழ் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு  சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90.

தமிழில் பல நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் ஆகியவைகள் எழுதி பெண் வாசகர்களின் மனதை கவர்ந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன. இவர் திருச்சி மாவட்டம், முசிறியில் கடந்த கடந்த 1924 -ஆம் ஆண்டு பிறந்தார்.

இவருடைய நாவல்களில் விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வு கூறப்பட்டிருக்கும். இவர் தமிழில் சுமார்  40 நாவல்களை எழுதி உள்ளார்.

“வேருக்கு நீர்’, “கரிப்பு மணிகள்’, “குறிஞ்சி தேன்’, “அலைவாய் கரையில்’ போன்ற நாவல்கள் ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளில் முக்கியமானவை. மேலும் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்

பாரதியார் உள்ளிட்டோரின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் ராஜம் கிருஷ்ணன் நூல் எழுதியுள்ளார். “சாகித்ய அகாடமி’, “சரஸ்வதி சம்மான்’, “பாரதிய பாஷா பரிஷத்’ உள்ளிட்ட உயரிய விருதுகளை ராஜன்கிருஷ்ணன் பெற்றுள்ளார்.

இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply