shadow

3652129

ஜம்மு-காஷ்மீர் நீங்கலாக இந்தியா முழுதுமுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்தியத் தொகுப்பிலுள்ள 15% ஒதுக்கீட்டு இடங்களில் B.V.Sc. & A.H (Bachelor of Veterinary Science & Animal Husbandry) படிப்பில் சேர்வதற்கான AIPVT – 2016 (All India Pre-Veterinary Test) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
 
“Veterinary Council of India நடத்தும் இத்தேர்வை +2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களை படித்துத் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், இந்தாண்டு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும் எழுதலாம். 31.12.2016 அன்று 17 வயது முதல் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்சி./எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கு 5 வயதுவரை தளர்வு உண்டு.

www.aipvt.vci.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1500, எஸ்சி./எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.750 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 7.2.2016. விண்ணப்பக் கட்டணத்தை 9.2.2016க்குள் இணையம் வழியாகவோ, வங்கிகள் மூலமாகவோ செலுத்தலாம். தாமதக் கட்டணம் ரூ.750 சேர்த்துச் செலுத்தி விண்ணப்பிக்கக்கடைசி நாள்: 1.3.2016.

சென்னை உட்பட இந்தியா முழுவதும் 44 இடங்களில் 14.5.2016 ஞாயிறு அன்று தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் மே கடைசி வாரத்தில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 011-26168299, 26184149, 26179960 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

          
+2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களை எடுத்துத் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், இந்தாண்டு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 30 இடங்கள்

ஹரியானா, லாலா லஜபதிராய் பல்கலைக்கழகம், மணிப்பூர், கால்நடை அறிவியல் பராமரிப்பு கல்லூரி,மிசோராம்,வேளாண்பல்கலைக்கழகம், ராஜஸ்தான் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் அனைத்து இடங்களையும் AIPVT தேர்வு மூலமாகவே நிரப்புகின்றன. தமிழ்நாட்டில், சென்னை கால்நடை பல்கலைகழகத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் (15%) 18 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் 12 இடங்களும் AIPVT  தேர்வு மூலம் நிரப்பப்படும்.

 

Leave a Reply